நீண்ட சரிவுக்கு பின் 400 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்!
வியாழன், 16 ஜூன் 2022 (09:30 IST)
பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதும் பயங்கரமாக சரிந்தது என்பதும் இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் படுமோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம்
கடந்த 10 நாட்களில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ள நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யவே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆறுதலாக சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 973 என வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 120 புள்ளிகள் வரை உயர்ந்து 15811 என வர்த்தகமாகி வருகிறது