ரத்து செய்த ரயில்களை இயக்க வேண்டும்! – ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (15:07 IST)
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சாதாரண ரயில்களை இயக்க எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தீவிரமடைந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது முன்பதிவுடன் கூடிய விரைவு ரயில்கள் சேவை மட்டுமே தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சாதாரண பயணிகள் ரயில் சேவையில் உள்ள 3,715 ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்த தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் கலாநிதி வீரமணி ஆகியோர் சாதாரண ரயில் சேவையை தொடங்க கோரி மனு அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்