CMC-க்கு கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை கலந்து பரிசோதிக்க அனுமதி!!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:41 IST)
இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அனுமதி அளித்துள்ளார். 

 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்தியாவில் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துவது குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
 
இதனையடுத்து வேலூர் சிஎம்சியில் 300 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை கலந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதே போல கோவாக்சினுடன் பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் இன்டராநசல் தடுப்பூசி மருந்தையும் கலந்து பரிசோதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்