350 கிமீ வேகத்தில் கரையை கடந்த டிட்லி புயல்: ஒடிஷாவில் பலத்த சேதம்

வியாழன், 11 அக்டோபர் 2018 (07:26 IST)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிஷா அருகே கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு டிட்லி என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புயல் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கரையை கடந்தது.

"டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூர் என்ற பகுதியில் மணீக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. அப்போது கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும், பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  இன்று பிற்பகலுக்குள் புயல் வலுவிழந்து மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி நகரும் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று பலத்தமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்