புயல் போன பிறகே மழை: வானிலை மையம் அப்டேட்

திங்கள், 8 அக்டோபர் 2018 (17:23 IST)
வானிலை ஆய்வு மையம் கடந்த 29 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை முடிந்த அன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவித்தது. ஆனால், மழை அந்த அளவிற்கு ஒன்றும் இல்லை. 

 
கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. எனவே இந்த் ஆண்டு நல்ல மழை பொழிய வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பு. 
 
ஆனால், இன்னும் வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை. இந்நிலையில், மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு பின்வருமாறு, 
 
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாலும் அரபிக்கடல், தென்னிந்திய கடற்பகுதி, வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் திசை மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் இந்த இரு புயல்களும் கரையை கடந்த பின்னரே வடகிழக்கு பருவமழை துவங்கும். பருவமழை தொடங்க ஒருவாரம் கூட ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்