11 மணி நேரம் திருப்பதி மூடல்… அன்னதானமும் ரத்து!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:47 IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது என அறிவிப்பு.


நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி நேர்க்கோட்டில் பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சமய நம்பிக்கையில் இது நிலவை பாம்பு விழுங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் (ஐப்பசி 22) தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.20 மணிக்கு முடிவடையும். இந்த சமயத்தில் இரவு நேரமாக உள்ள மற்ற நாடுகளில் கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். அதாவது 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது. இதனால் அன்று முழுவதும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள் என்பதால் அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளியின் போது சூரிய கிரகணம் ஏற்பட்டதால் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Sugapriya Prakash 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்