2,000 ரூவா நோட்டு Chip மாதிரி தான், அயோத்தி ராமர் கோவில் Time Capsule!!

புதன், 29 ஜூலை 2020 (10:38 IST)
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு அடியில் காலக்குடுவை (Time Capsule) வைக்க உள்ளதாக வெளியான் தகவல் போலியானது.
 
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
 
ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் அமையும் இடத்தின் அடியில் 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் எனப்படும் காலக்குடுவையை புதைக்க உள்ளார்கள் என தகவல் வெளியானது. 
 
எதிர்கால சந்ததிகள் ராமர் கோவில் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் அதில் எழுதப்பட்டு குடுவைக்குள் வைத்து புதைக்கப்பட உள்ளது என பலவித செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
 
ஆனால்  இந்த தகவலுக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்ற தகவல் பொய்யானது என அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்