இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார்.
இந்நிலையில் ஒரு யுட்யூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா கேரியரின் பல விசயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “முதலில் காதலுக்கு மரியாதை படம் நான் நடிக்க வேண்டியது. ஆனால் எனது மேலாளர் அந்த படம் பற்றி என்னிடம் சொல்லாமல் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அந்த படம் முடிந்த பின்னர்தான் எனக்கு அந்த விசயமே தெரியவந்தது” எனக் கூறியுள்ளார்.