கேப் விடாமல் உறவுக்கு அழைத்த பெண்.. கோபத்தில் கொலை செய்த இளைஞர்! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

புதன், 24 ஏப்ரல் 2024 (12:05 IST)
கர்நாடகாவில் 48 வயது பெண்மணியுடன் உறவில் இருந்த இளைஞர் பெண்மணியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்தவர் 48 வயதான ஷோபா. இவருக்கு திருமணம் செய்யும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 19ம் தேதி மகள்கள் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் ஷோபாவுக்கு தொடர்ந்து போன் செய்தபோதும் அவர் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஷோபா வீட்டில் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஷோபாவின் போனை ஆய்வு செய்ததில் அவர் நவீன் என்ற 23 வயது இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் நவீனை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ALSO READ: செல்பி எடுக்க ஆசைப்பட்டு எரிமலைக்குள் விழுந்த பெண்! – இந்தோனேஷியாவில் சோகம்!

ஷோபாவுக்கு நவீன் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கமும், ரகசிய உறவும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஷோபாவின் மகள்கள் வெளியே சென்றிருந்த நிலையில் அங்கு வந்த நவீனுடன் ஷோபா உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் அதில் ஷோபா திருப்தி அடையாததால் மீண்டும் மீண்டும் உறவுக்கு தன்னை தூண்டியதாகவும் அதனால் ஆத்திரமடைந்து ஷோபாவை அடித்துக் கொன்றதாகவும் நவீன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. தவறான உறவால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்