உத்தரப்பிரதேசம் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, அவரது ஆசிரியர் துணிக்கு அளவெடுக்க வேண்டும் என கூறி மாணவியின் துணிகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆசிரியர் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை எச்சரித்திருக்கிறார். வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.