தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

Prasanth Karthick

ஞாயிறு, 23 மார்ச் 2025 (15:40 IST)

கேரளாவில் தாயை கொன்றுவிட்டு மகன் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், கொலை செய்யப்பட்ட தாய் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாவட்டம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எலமடுவை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது தாய் சுஜாதா. சுஜாதா நீண்ட காலமாக உடல்நலக்குறைவாக இருந்து வந்துள்ளார். பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் அவர் குணமடையாததாக தெரிகிறது. மேலும் மருத்துவ செலவுகளால் ரஞ்சித் வறுமையில் வாடியுள்ளார்.

 

இதனால் இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இருவரும் அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்ட நிலையில் ரஞ்சித் தன் தாயின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் சுஜாதா மூர்ச்சையான நிலையில் அவர் இறந்துவிட்டதாக எண்ணி ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று காலையில் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பது குறித்து விசாரிக்க வந்த மின்வாரிய ஊழியர்கள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீஸார் அங்கு விரைந்தபோது சுஜாதா உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்