தந்தையை 30 துண்டுகளாக வெட்டிய மகன்! பகீர் சம்பவம்

புதன், 14 டிசம்பர் 2022 (17:07 IST)
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் தன் தந்தையை 30 துண்டுகளாக மகன் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல் கோட் என்ற மாவட்டத்தில் உள்ள முதோல் நகரில் வசிப்பவர் பரசுராம் குலாலி953). இவர் மகன் வித்தலா(20). பரசுராம் குலாலி, தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இதேபோல், குலாலி, தன் மகன் வித்தலாவை எதோ பேசியதாகத் தெரிகிறது.

இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தவே, ஆத்திரம் அடைந்த வித்தலா, ஒரு இரும்புக் கம்பியை எடுத்து, தந்தையை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து,தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரசுராம் உடலை மீட்டு, வித்தலாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்