புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயண சாமி முதலமைச்சராக பதவி வகிக்கிறார். அங்கு துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும். ஓய்வு பெற்றவருமான கிரண்பேடி பதவி வகிக்கிறார். இவர்கள் இருவருமே அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வார்கள். அது ஊடகங்களுக்கு பெரும் தீனியாய் அமையும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.