டூவல் சிம்களுக்கு தனி கட்டண விவகாரம்.. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை! – TRAI விளக்கம்!

Prasanth Karthick

வெள்ளி, 14 ஜூன் 2024 (16:05 IST)
டூவல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தாமல் உள்ள சிம் கார்டிற்கு தனி கட்டணம் செலுத்தும் புதிய முறை அமலுக்கு வர உள்ளதாக வெளியான தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மறுத்துள்ளது.



இந்தியாவில் மக்கள் பலரும் டூவல் சிம் மொபைல்களை பயன்படுத்தி வரும் நிலையில் ஒரு எண்ணை சொந்த பயன்பாட்டிற்கும், மற்றொரு எண்ணை தொழில் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவதும் சகஜமாக உள்ளது. மேலும் பலர் இரண்டு சிம் கார்டுகள் வைத்திருந்தாலும் ஏதோ ஒன்றை மட்டும் ரீசார்ஜ் செய்வதும் உண்டு. இதனால் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் சிம் கார்டுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுத்துள்ளது. அப்படியான எந்த கட்டண முறையையும் அமல்படுத்துவது குறித்த விவாதங்களோ, முடிவுகளோ இதுவரை எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொலைபேசி வாடிக்கையாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்