மைசூரு அருகே உள்ள கோயிலில் நடக்கும் அபிஷேகத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். மேலும் மேலும், பெங்களூரு-மைசூரு இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மைசூரு நகருக்கு வந்தார்.
பிரதமர் மோடி மைசூரு வந்தால் தங்குவதற்காக மைசூருவில் உள்ள புகழ்பெற்ற லலித் மஹால் பேலஸ் ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையும் பிரதமர் தங்குவதற்காக லலித் மஹால் பேலஸில் அறைகள் கேட்கப்பட்டன. ஆனால் திருமண சீசன் என்பதால், அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்று ஹோட்டல் நிர்வாகம் கூறிவிட்டது.