மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ மனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், முதல்வர் பதவியில் இருந்து மம்தா விலக கோரியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் புறக்கணிப்பு:
அதன்படி இன்று நடைபெற இருந்த பேச்சு வார்த்தைக்கு மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்த நிலையில், மருத்துவர்கள் குழு முன் வரவில்லை. இதையடுத்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.