ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சிதம்பரம் கூறியுள்ளதாவது ; தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக வெளியான தகவலை கடுமையாக மறுக்கிறேன். உயர்நீதிமன்ற நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் எனது தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். 7 மாதங்களுக்கு பின்னர் எனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த எஃஐஆர் பதிவும் செய்யப்படவில்லை. ஜன்நாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன.பொய்யர்களால் தவறாக தவறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. சுதந்திரம் பெற போராடினோம். சுதந்திரத்தை காக்கவும் போராடி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.