ஆளுனர் அனுப்பிய ரசீதை திருப்பி அனுப்பிய முதல்வர் ! பஞ்சாபில் பரபரப்பு

புதன், 24 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
பஞ்சாப் மாநில ஆளுனர் பன்வாரி புரோகித் அனுப்பிய ரசீதை திருப்பி அனுப்பியுள்ளார் முதல்வர் பகவத் மான்.

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்  2021 ஆம் ஆண்டு வரை பாஜக அரசால் தமிழகத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோகித். இவர் கடந்த அண்டு ஆகஸ்டில் பஞ்சாப் மா நிலத்தின் கவர்னாக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில், அம்மாநிலத்தில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பகவான்  மன் தலைமமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த  நிலையில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆளுனர் மாளிகையில் நடந்த மத நிகழ்ச்சிக்கு ரூ.8.31 லட்சம் செலவிடப்பட்டது. இதற்கான ரசீதை முதல்வருக்கு அனுப்பியுள்ளார் கவர்னர் பர்வாரிலால் புரோகித்.

ஆனால், அந்த ரசீதுக்குப் பணம் தர மறுத்து, அதை முதல்வர் ஆம் ஆத்மி அரசு திருப்பி அனுப்பியுள்ளதது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, முதல்வர்  கெஜ்ரிவால் தலலைமையிலான டெல்லி -ஆம் ஆத்மி அரசில், மதுபான உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக கலால் வரித்துறை அமைச்சசர் சிசோடியா மீதும், முதல்வர் கெஜ்ரிவால் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்