50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் …உ.பி.யில் மீண்டும் அதிர்ச்சி….

செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:55 IST)
சமீப காலமாக உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பாண்டா மாவட்ட நீர்பாசனத்துறையில்  பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த 10 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து வந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர் ரகசியமாக எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளங்களுக்குய் விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்