இன்றைய நவீன உலகத்தில், இளம் தலைமுறையினர் பலர், சிறு வயதிலே காதல் வயப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் சின்னஞ்சிறு சண்டைகளுக்காக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர். காதலிக்கும் போது இருக்கும் பாசம், கல்யாணத்திற்கு பின் பலருக்கு இருப்பதில்லை. எதையுமே எளிதில் அடைய வேண்டும் என நினைத்து, தங்களின் அவசர புத்தியால் இளம் தலைமுறையினர் பலர் தங்களது வாழ்க்கையை துலைத்துவிட்டு நிற்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு சம்பவம் அரங்கேரியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சிக்ரி அம்பா, கிராமத்தில் அகஸ்டின் என்ற இளைஞனும், மாதுரி என்ற பெண்ணும் கல்யாணம் செய்யாமல் ஒன்றாய் வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களாக மாதுரியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அகஸ்டின், மாதுரியிடம் அவரது செல்போனை தரும் படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், மாதுரியின் தலையின் மேல் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாதுரியின் உடலைக் கைபற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அகஸ்டினை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.