காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 116 இடங்கள் இருந்தும், 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் வாஜூபாய்வாலா. மேலும், மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ்-மஜத தரப்பு. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர், பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி என்னிடம் பேரம் பேசியதாக, காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார்.
தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அந்த ஆடியோவில் பேசிய பெண்ணின் குரல் என் மனைவியின் குரல் அல்ல எனத் தெரிவித்துள்ளார் ஷிவராம் ஹெப்பர். அமைச்சரின் இந்த தகவல் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.