எல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க - சாபம் விட்ட எம்.எல்.ஏ

திங்கள், 21 மே 2018 (15:38 IST)
தான் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் மக்கள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தான் வரும் என உத்தர பிரதேச எம்எல்ஏ சாபம் விடும் வகையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ வாக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பூர். இவரது கட்சிப் பெயர் சுகள்தேவ் பாரத் சமாஜ். இவர் ஒரு தீவிர மோடி ஆதரவாளர். 
 
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ள அவர், தான் நடத்தும் பொதுக்கூட்டத்தை தவிர்த்து மக்கள் வேறு தலைவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை வரவேண்டும் என சாபம் விட்டுவிடுவேன் என்றார்.
 
மேலும் தான் சாபம் விட்டால் அது நடந்துவிடும் என்றார். எனவே மஞ்சள் காமாலை பாதிப்பில் சிக்காமல் இருக்க அனைவரும், எனது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்