இதற்கு அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக அரசு கொண்டுவந்துள்ள சட்டம், சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை தோற்கடிக்க வேண்டும்.
இந்த அவசர சட்டம் மக்களவையில் நிறைவேறும் என்றாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதவை தோற்கடிக்கலாம். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.