பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்

புதன், 26 ஏப்ரல் 2017 (14:47 IST)
பாகுபலி 2 படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று தெரிந்துக்கொள்ள விடுமுறை கேட்டு தெலங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. பாகுபலி படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து இரண்டாம் பாகத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பதை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த விஜயகுமார் என்ற போலீஸ்காரர் ஒருவர் பாகுபலி 2 படம் பார்க்க விடுமுறை கோரி விடுப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். அதனால் வரும் 28ஆம் தேதி எனக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்