இந்நிலையில் மாயமான அப்பெண் உடலில் பல காயங்களுடன் நேற்று முந்தினம் மீட்கப்பட்டார். உடலில் கடித்துவைத்த அடையாளங்களும் இருந்தன. பின்னர் அவரை மருத்துவர் சோதனை செய்யபிறகு அவருக்கு உடலில் போதை ஊசி போட்டு மயக்கமடையச் செய்து , தொடர்ந்து 10 நாட்களாக வன்புணர்வு செய்தது தெரியவந்தது.அப்பெண்ணை கடித்துவைத்தும் ,சித்ரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்த போது, நிஷூகுப்தா தன்னை கற்பழித்ததாக அவர் கூறினார். மேலும் இளம்பெண்ணுக்கு நிஷூகுப்தா அறையில் ந்தித்த போது, தண்ணீர் கொடுத்ததும் மயங்கி விட்டார். அதன்பிறகு தான் நிஷூகுப்தா அவரை கற்பழித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.