130 வருட முதலைக்கு இறுதிச்சடங்கு: நெகிழ வைத்த கிராம மக்கள்

சனி, 12 ஜனவரி 2019 (14:45 IST)
சத்தீஸ்கரில் 130 வருட முதலைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்தது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே முதலை என்றால் அது கொடூரமானது. அது மனிதர்களை கொல்லும் கொடிய மிருகம் என்று தான் கூறுவர். சத்தீஸ்கரில் உள்ள பவமோக்த்ரா கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது.
 
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் குளத்தில் குளிக்க சென்றாலும் அந்த முதலை அவர்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கும். இதனால் அந்த முதலை மீது ஈர்ப்பு கொண்ட மக்கள் அதன் மீது பேரன்பு வைத்து அதனை பாசமாக கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் 130 வயதான அந்த முதலை உடல்நலக்குறைவால் காலமானது. இதனால் வருத்தமடைந்த ஊர் மக்கள், அதற்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்தனர். பின்னர் முதலையை அடக்கம் செய்தனர். கிராம மக்களின் இந்த செயல் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்