ரூ.5-க்கு 30 நிமிட இண்டர்நெட்: டீ மாஸ்டரின் பலே ப்ளான்!!

திங்கள், 24 அக்டோபர் 2016 (14:34 IST)
பல்லாரியை சேர்ந்த சயித் காதர் பாட்ஷா என்ற 23 வயது டீ கடை உரிமையாளர் தனது வியாபாரத்தை அதிகரிக்க புதிய முயற்சியைச் செய்துள்ளார். 

 
இவருடைய டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் 5 ரூபாய் விலையில் ஒரு கப் டீயுடன் 30 நிமிடத்திற்கான இண்டெர்னெட் தரவை இலவசமாக வழங்கி வருகிறார்.
 
மாதத்திற்கு 1000 ரூபாய் தங்களது செலவுக்காக வைத்திருக்கும் மாணவர்கள் தரவு ரீசார்ஜ்களை தவிர்த்து 1 முதல் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இண்ட்டெர்னெட் இணைப்பைப் பயன்படுத்தி கொள்ள இதனை அவர் செய்துள்ளார். மேலும், இதனால் தனது வியாபாரத்தையும் அதிகரிக்க செய்துள்ளார். இவரின் வியாபாரம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
 
இவரது டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் ஒரு கூப்பன் அளிக்கப்படும். கூப்பனில் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்த துவங்கலாம், 30 நிமிடத்தில் தானாகவே இணைய இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் அந்த கூப்பன் ஒரு நாளைக்கு மட்டுமே.
 
ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் வரை நல்ல வேகத்தில் இணையதளத்தைப் பயப்படுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்