மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பால், தயிர், பழங்கள், காய்கறிகள், பருப்பு, உணவு தானியங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற உள்ளூர் ரயில் சேவைகளுக்கும், ஹஜ் யாத்திரை போன்ற புனித யாத்திரைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிற ஜிஎஸ்டி வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விதமான வரி விதிப்பு இருக்கும். இதில் மேலே குறிப்பிடப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.