தாஜ்மஹாலுக்கு மேக்கப் போட முடிவு செய்த மத்திய அரசு

வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:04 IST)
உலக அதிசயங்களில் ஒன்றும் காதலின் நினைவு சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலை பாதுகாக்க அதற்கு மேக்கப் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



 


தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளிவரும் மாசு மற்றும் புகை ஆகிய காரணத்தால் தூய வெள்ளை நிறத்தில் இருந்த தாஜ்மஹால் தற்போது லேசான பழுப்பு நிறத்தில் மாறி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் இழுக்க தாஜ்மஹாலின் ஒரிஜினல் நிறத்தை கொண்டு வர அதற்கு மேக்கப் போக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதற்கு ‘Mud Therapy’ என்ற மேக்கப் போட முடிவெடுத்துள்ளது.

மட் தெரபி என்பது பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான். தாஜ்மகால் மீது மட் தெரபி மூலம் பூசப்படும் பூச்சு, அதன் நிறத்தை அப்படியே காத்து, அதன் அழகை அதே பொழிவோடு இருக்க உதவும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்