நேபாள் விமான விபத்து: பயணித்த 22 பேரும் பலி!

செவ்வாய், 31 மே 2022 (09:54 IST)
நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த   22 உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. 

 
நேபாளத்தில் காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இந்த விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்தனர். 
 
இந்நிலையில் நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த   22 உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான தாரா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் 4 இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்