அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. மசூதிக்கு கீழ் ஒரு வழிபாட்டுத்தலம் இருந்ததாக தெரியவந்தாலும், அது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை ஆதாரங்களுடன் சொல்லவில்லை. மேலும் கோவில் இடிக்கப்பட்டுத்தான் மசூதி கட்டப்பட்டதாகவும் தொல்லியல் துறை சொல்லவில்லை
சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகின்றனர். அவ்வாறு அவர்கள் நம்புவதை மறுக்க முடியாது, மதங்களில் இருக்கும் நம்பிக்கையை சுப்ரீம் கோர்ட் மதிக்கின்றது என இதுவரை வெளிவந்துள்ள தீர்ப்பின் ஆகும். இந்த தீர்ப்பின் முழுவிபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது