திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கோயிலை நிர்வகிக்க இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது