பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம்: தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் சுப்பிரமணியன் சுவாமி!!

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:49 IST)
பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிநாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து கடந்த மே மாதம் பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


 
 
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் எதிர்ப்பார்த்த பலனை தரவில்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக சரிந்துள்ளது.
 
இது குறித்து யஷ்வந்த் சின்கா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்தனர்.
 
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பிரதமருக்கு இது குறித்த எச்சரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.  
 
அவர் அந்த கடித்ததில் பின்வருமாறு எழுதியுள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவை நோக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை சரிக்கட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
பிரதமர் அலுவலகத்தில் பிரச்சினைகள் மேலாண்மை குழு ஒன்றை அமைக்க வேண்டும். 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். இல்லையெனில் தேர்தல் நேரத்தில் இது பலவீனமாய் அமையும் என கூறியுள்ளார்.
 
மேலும், பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக செல்வது பின்னர் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இழுத்து சென்று விடும். எனவே, இந்த வி‌ஷயத்தை சிறப்பாக கையாள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்