இதுகுறித்து இன்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் கவர்னாராக சக்தி கந்த தாஸை நியமனம் செய்தது மத்திய அரசு எடுத்துள்ள தவறான முடிவு. அவருக்கு ப.சிதம்பரத்துடன் நெருக்கம் அதிகம் உண்டு. ப.சிதம்பரம் செய்த பல்வேறு முறைகேடுகளின் நீதிமன்ற வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றியவர் சக்தி கந்ததாஸ். எதற்காக அவரை காப்பாற்றினார் என்பது எனக்குத் தெரியாது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.