வாரியமா? குழுவா? விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
புதன், 28 மார்ச் 2018 (14:50 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்கிறது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. கர்நாடகா அரசோ உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறவில்லை என்று கூறிவருகிறது.
உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது திட்டம் என்றால் வாரியமா அல்லது குழுவா? என்று விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காலக்கெடு முடிவடைய உள்ள நேரத்தில் காவிரி விவகாரத்தில் விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசு தற்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை. மத்தியில் எந்த அரசு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராதது தமிழகத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.