அந்த வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், தினகரனின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு முடிவு எடுக்க வேண்டும் எனவும், இரட்டை இலை வழக்கை 3 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.