மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் கைது! போலீசார் அதிரடி

சனி, 3 ஜூன் 2017 (06:36 IST)
ஒரு மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவரை அனைவரும் பாராட்டி வாழ்த்துவதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதன்முறையாக மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது நடந்தது பீகார் மாநிலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.



 




சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 86.2% மதிப்பெண் எடுத்து கணேஷ்குமார் என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். ஆனால் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் பேட்டியளித்தபோது பாடம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் கூற திணறினார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த தேர்வுத்துறையினர் அவருடைய மதிப்பெண்களையும் விடைத்தாள்களையும் சரிபார்த்தபோது அவர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது. இதனால் கணேஷ்குமார் தேர்ச்சி ரத்து செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பீகார் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்