தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு ஸ்டாலின் டெல்லிக்குக் கிளம்பினார். அங்கு 10 மணிக்கு சென்றடையும் ஸ்டாலின் முதலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கிறார். அங்கு தமிழக எம்பிக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் மதிய உணவை முடித்த பின்னர் சிறு ஓய்வுக்குப் பின்னர் மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.