ஸ்புட்னிக் வி பயன்பாடு… அடுத்த வாரம் முதல் இந்திய சந்தையில்!

வெள்ளி, 14 மே 2021 (08:42 IST)
இந்தியாவில் அங்கிகரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி அனுமதிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னதாக ஸ்புட்னிக் வி முதல் பேட்ச் இறக்குமதி செய்யப்பட்டது. அதையடுத்து அந்த தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகளை 3 வார இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற தடுப்பூசிகளுக்கும் ஸ்புட்னிக் வி க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் , முதல் மற்றும் இரண்டாவது டோஸில் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்