ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் நிலையில், பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்லும் போது அவர்கள் கொண்டு செல்லும் இருமுடிக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது என்றும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, இருமுடியில் உள்ள தேங்காய் விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற நிலையில், தற்போது தேங்காய் உள்பட இருமுடியில் உள்ள அனைத்து பொருட்களையும் சபரிமலை பக்தர்கள் இனி தாராளமாக விமானத்தில் எடுத்துச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.