தொடங்கிவிட்டது கோடை.. இன்று மட்டும் 7 நகரங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு...!

Mahendran

வியாழன், 6 மார்ச் 2025 (19:13 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஏழு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடை தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.
 
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், மார்ச் 10 முதல் இன்னும் கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வெப்பம் காணப்படுகிறது. குறிப்பாக, ஏழு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருப்பத்தூர், வேலூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்