இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பேசினர். அதன் பின்னர் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது அவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு போராடினர். அதில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது என தமிழில் பேசினார் அவர்.
பேசி முடித்த பின்னர் இறுதியில், நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி தவிர எந்த மொழியில் பேசவும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தமிழ், வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.