சோனாகட்சியை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் இதுவரை பெரும்பாலும் மம்தா கட்சியினர்களுக்கே வாக்களித்து வந்தனர். ஆனால் அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, குழந்தைகளுக்கு முழுமையான அரசு திட்டங்கள் ஆகியவைகளை மம்தா அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த முறை பாலியல் தொழிலாளிகள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
அதுதான் நோட்டா முடிவு. ஆம், சோனாகச்சியில் உள்ள முப்பதாயிரம் வாக்குகளும் இந்த முறை நோட்டாவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகள் குறிப்பாக மம்தா கட்சி வேட்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.