முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமாரும் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது.