வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா

Mahendran

சனி, 3 ஆகஸ்ட் 2024 (15:35 IST)
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு பகுதியில் இன்னும் மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி மக்களுக்கு கர்நாடக அரசு துணை நிற்கும் என்று கூறிய முதல்வர் சித்தராமையா, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு 100 வீடுகள் கர்நாடக மாநிலத்தின் சார்பில் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ராகுல் காந்தி சமீபத்தில் நேரில் வயநாடு பகுதியை பார்வையிட்ட நிலையில் இந்த பகுதி மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்