மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை: பட்ஜெட்டில் அறிவித்த கர்நாடக முதல்வர்..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (14:08 IST)
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்
 
மேலும் விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைவில் செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக மாநில அரசு முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அணை கட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்