சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக எதிர்க்கட்சியாகவும், வெறும் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆளுங்கட்சியாகவும் இருப்பதால் மக்கள் தீர்ப்புக்கு விரோதமான ஒரு ஆட்சி நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்வோம் என்று மஜத கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சித்தராமையாவுக்கு ஆதரவாக 9 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தனி அணியாக பிரிந்து செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.