இந்த நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மேகதாது அணை திட்டம் குறித்த பிரச்சனையில் முதல்வர் குமாரசாமியின் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா முழு ஆதரவு தரவுள்ளதாக அறிவித்துள்ளார். இருவருக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் முதல்வருக்கு சித்தராமையா கைகொடுத்துள்ளதை அம்மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தை பொருத்தவரை எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சியாக பார்க்கும் மனப்பான்மையும், அரசு என்ன செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளும் இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையிலும் வெற்றி பெற முடியவில்லை. ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது போன்ற பல பிரச்சனைகளில் ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ளது போன்று மேகதாது அணை குறித்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது.