பாதுகாப்பில்லாத ஓடுபாதை ! - சென்னை விமான நிலையத்துக்கு நோட்டிஸ்

புதன், 10 ஜூலை 2019 (09:31 IST)
சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஓடுபாதை பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விமான ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இரு விமானநிலையங்களும் ஓடுபாதை உள்ளிட்ட பாதுகாப்பான விமான பயணம் ஆகியவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள் அடிக்கடி இழுந்து விழுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்