பொதுச்சொத்துகளை சேதப்படுவோரை சுட வேண்டும் - மத்திய இணை அமைச்சர்

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (21:13 IST)
இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர். 
 
இந்நிலையில் சென்னை பல்கலை மாணவர்களுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் , குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்குஎதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, அசாம் மாநிலங்களில் பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.  
 
வலுத்துவரும் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணராமல் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி,  பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட வேண்டும் என  பேசியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட வேண்டும் என மாவட்டம் நிர்வாகங்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்